
சீனாவில் வேகமாக பரவும் சிக்குன்குனியா!
06.08.2025 07:54:29
2025 ஜூலை மாதம் முதல் சீனாவின் குவாங்டாங் மாகாணம் முழுவதும் 7,000க்கும் மேற்பட்ட சிக்குன்குனியா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இது, சுகாதார வல்லுநர்கள் நிலைமையை ஆய்வு செய்ய முன்முயற்சியுடன் கூடிய நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டியுள்ளது.
ஃபோஷான் நகரம் நோய் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அங்கு சிக்குன்குனியா நோயாளிகள் முறையான சிகிச்சை வசதிகளுடன் மருத்துவமனையில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஃபோஷான் நகரத்திலும், குவாண்டோங் மாகாணத்தில் குறைந்தது 12 நகரங்களிலும் இந்த தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.
நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா, சீனாவில் அரிதாக இருந்தாலும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளுக்கு பொதுவானது.