மக்களுக்கான வகிபாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்றி வருகிறது!

07.02.2024 14:48:08

வங்குரோத்து நாட்டில் நாட்டை ஆளும் அரசாங்கத்தால் பாடசாலைகளுக்கு கணினிகளைக் கூட வழங்க முடியாதுள்ளது. மக்கள் சார் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த பணியை வெற்றிகரமாக செய்து வருகிறது.இது போன்ற பல திட்டங்களை எதிர்க்கட்சி அமுல்படுத்தும் போது, ​​வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டிலும் இலஞ்சம், ஊழல், மோசடி, கப்பம், மோசடிகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மனித இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட பல தரமற்ற மருந்துகளை மக்களுக்கு வழங்கியதால் பலரது வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இந்த மருந்துகளில் இருந்து சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பல அதிகாரிகள் பெருமளவு தொகையை கொமிஸ் பெற்றுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 89 ஆவது கட்டமாக, அனுராதபுரம் இராஜாங்கனை ராகுல மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (06) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாயிகள், மீனவர்கள், தொழில் முனைவோர்கள், அரச அதிகாரிகளுக்கு வேறு வழியின்றி இருக்கும் போது, திருடர்கள் கூட்டம் காலம் காலமாக திருடி நாட்டையே அழித்து வருகிறது.ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்த பொருளாதாரக் கொலையாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்கள் திருடிய வளங்கள் நாட்டுக்கு மீள பெற்றுக் கொண்டு, கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடு செய்யப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அமைச்சர்களாக அமைச்சுகளின் ஊடக பல்வேறு துறைகளில் அபிவிருத்திகளை முன்னெடுத்தாலும்,எதிர்க்கட்சித் தலைவராகவோ,எதிர்க்கட்சி அரசியல் கட்சியாகவோ மக்களுக்கு சேவை செய்வது இதுவே முதல் தடவை. இது மக்கள் கோரிய முறைமை மாற்றத்தின் ஓர் வடிவம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.