கோவையின் அடையாலமாக உருவெடுக்கும் திருவள்ளுவர் சிலை!

05.01.2024 16:35:42

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குறிச்சிக்குளம் ஏரிக்கரை அருகே  பிரம்மாண்டமான  திருவள்ளுவரின் சிலையொன்று  நிறுவப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

15 அடி அகலமும், 20 அடி நீளமும், 2.5 தொன் எடையும் கொண்ட குறித்த  சிலையானது 247 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு  உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கவுள்ளார்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.