கமலின் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய ஷிவானி

07.09.2021 05:40:52

சின்னத்திரையில் இருந்து சந்தானம், சிவகார்த்திகேன் என சில நடிகர்கள் சினிமாவில் பிரபலமானதை அடுத்து பிரியா பவானி சங்கர், வாணி போஜன் போன்ற சீரியல் நடிகைகளும் தற்போது சினிமாவில் பிரபல நடிகைகளாகி உள்ளனர்.

இவர்கள் வரிசையில் தற்போது பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவும் இணைந்துள்ளார். அடுத்து பகல் நிலவு, இரட்டை ரோஜா என சில சீரியல்கள் மற்றும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்ற ஷிவானி நாராயணனும் தற்போது கமல், விஜய் சேதுபதியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த செய்திகள் ஏற்கனவே வெளியாகி வந்தன.

இந்த நிலையில், தற்போது விக்ரம் படத்தில் தான் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் கலந்துரையாடிய ஷிவானியிடம் ஒரு ரசிகர், ‛‛நீங்கள் விக்ரம் படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டார். அதற்கு விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் கேரவன் போட்டோவை காண்பித்து தான் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார் ஷிவானி.