இரண்டாவது நாளாகவும் தொடரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்!

05.01.2021 09:45:52

யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒருக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி முன்னெடுக்கும் உணவு ஒறுப்புப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

இன்று காலை போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு சென்ற யாழ்.பல்கலைக்கழக சமூகவியல் துறை, துறைத்தலைவர் ஜீவசுதன் மாணவர்களுடன் கடும் தொணியில் பேசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.