அறிமுக இயக்குனரின் படத்தில் நயன்தாரா..

31.03.2024 08:00:00

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன அன்னபூரணி படுதோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.  இந்த படத்தை சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 

மேலும் அவர் கைவசம் டெஸ்ட், தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்கள் உள்ளன. இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் செந்தில் இயக்கவுள்ளார். இந்த படத்தை யானை மற்றும் முத்துராமலிங்கம் என்ற காதர் பாட்சா ஆகிய படங்களை தயாரித்த ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 

இந்த படத்துக்காக நயன்தாராவுக்கு 11 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக நயன்தாராவின் படங்கள் பெரிதாக ஓடாத நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.