கோர்பேயில் 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை
26.05.2021 13:41:04
கோர்பேயில் 16 வயது சிறுவனைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்தாம்ப்டன்ஷீர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடமபெற்ற குறித்த கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த 16 வயது சிறுவனுக்கு சம்பவ இடத்திலேயே மருத்துவ உதவிகள் கொடுக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக நோர்தாம்ப்டன்ஷீர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.