வியக்க வைக்கும் மனித உடல் அதிசயங்கள்...
மனித உடலின் வளர்ச்சி, 21 வயதோடு நின்று போய்விடும். மனிதர்களின் ஆயுள் முடியும் வரை வளர்வது காது மட்டும் தான்.
மனித உடலின் மூலப்பொருட்களாக, 58 வகையான தனிமங்கள் இருக்கின்றன. அவற்றில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணில் இருந்து கிடைத்தவை. மீண்டும் மண்ணோடு கலப்பவை. *மனித உடலின் வளர்ச்சி, 21 வயதோடு நின்று போய்விடும். ஆனால் மனிதர்களின் ஆயுள் முடியும் வரை வளர்வது காது மட்டும் தான்.
ஒரு மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக வைத்துக்கொண்டால், அவனது காது, ஒரு குட்டி யானையின் காது அளவுக்கு இருக்கும். *ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் (முடி) எண்ணிக்கை, சுமார் 5 லட்சத்திற்கு குறையாமல் இருக்கும். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள், உள்ளங்கையும், உள்ளங்காலும்தான். *பொதுவாக மனிதர்கள் இரவு வேளையில் தூங்கும்போது மட்டும்தான் கண்களை மூடியிருப்பதாக நாம் நினைக்கிறோம்.
ஆனால் பகல் வேளையில் விழித்திருந்தாலும் கூட, ஆயிரக்கணக்கான முறை நம்முடைய கண்களை சிமிட்டுகிறோம். இதை ஆய்வு செய்து பார்த்தால், இரவைத் தவிர பகல் வேளையிலும் கூட பாதி நேரம் நாம் கண்களை மூடிக்கொண்டுதான் இருக்கிறோம். *மனித இதயம், இடது பக்கத்தை விட வலது பக்கம் கொஞ்சம் பெரியதாக இருக்கும்.
இதயமானது, ஒரு நாளுக்கு ஒரு லட்சம் முறை சுருங்கி விரிகிறது. அப்படியானால் ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட நான்கு கோடி முறை. *இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான பொருட்களும் இருக்கலாம். ஆனால் அவையெல்லாம் ஒன்று அல்லது இரண்டு வேலைகளைத் தான் செய்யும். ஆனால் மனித உடலில் உள்ள கையானது, பல ஆயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாகச் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றது.
நாம் தட்டில் உணவை வைத்து, அதை ஒரு ஸ்பூனில் எடுக்கும்போது, உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன. *மனித உடலில் உள்ள கால் பாதங்களும், பிரம்மிப்பை ஏற்படுத்தும் ஒன்று தான். ஒரு சதுர அடியில் 3-ல் ஒரு பங்கு மட்டுமே உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள உடலை, சுமார் 70 முதல் 80 வருடங்களாக தூக்கி நிற்கின்றன என்பதே வியப்புக்குரியதுதான்.
*மனித உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, 2 நீச்சல் குளங்களை சுத்தப்படுத்துவதற்கு தேவையான குளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க தேவையான பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு, ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இருப்பு என பல பொருட்கள் உள்ளன.