வாஜ்பாய் புகழைப் போற்றி வணங்குகிறோம்... அண்ணாமலை
25.12.2023 06:01:11
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
முன்னாள் பாரதப் பிரதமரும், பாஜக நிறுவனர்களில் ஒருவரும், மிகச் சிறந்த பேச்சாளரும், கவிஞருமான, பாரத ரத்னா அமரர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினம் இன்று.
சுதந்திரப் போராட்டத்தின்போது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்ற வாஜ்பாய், சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்ததில் மிகப்பெரிய பங்கு வகித்தவர். ஒன்பது முறை மக்களவைக்கும் இரண்டு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், பாராளுமன்ற நிலைக் குழுக்களின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என பல பதவிகளிலும் திறம்படப் பணியாற்றியவர்.