
H-1B விசா கட்டணத்தில் பெரும் மாற்றம்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், H-1B விசா கட்டணத்தில் பெரும் மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. புதிய உத்தரவு மூலம், H-1B விசா விண்ணப்பக் கட்டணமாக 100,000 அமெரிக்க டொலர் வசூலிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களை நியமிப்பதன் மூலம் அமெரிக்க வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதாகும். |
தொழிலாளர் செயலாளர், H-1B ஊதிய விதிகளை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடவுள்ளார். இது அமெரிக்க தொழிலாளர்களின் ஊதிய குறைபாடுகளை தடுக்கும் முயற்சியாக கருதப்படுகிறது. தொழில்நுட்ப துறை, குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் H-1B விசா பெரும் நிறுவனங்கள், இந்த மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படலாம். தற்போது, H-1B விசா விண்ணப்பத்திற்கு 215 டொலர் லாட்டரி பதிவு கட்டணம் மற்றும் I-129 படிவ கட்டணம் 780 டொலர் வசூலிக்கப்படுகிறது. புதிய கட்டணம், இவற்றைத் தவிர வசூலிக்கப்படுமா அல்லது சேர்க்கப்படுமா என்பது தெளிவாகவில்லை. இந்த மாற்றம், வேலை அனுமதி, புகலிட கோரிக்கை உள்ளிட்ட பிற குடியுரிமை சேவைகளுக்கான கட்டண உயர்வுகளுடன் இணைந்து, அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு, காவல் நிலையங்கள் மற்றும் அதிகாரிகள் எண்ணைக்கையை அதிகரிக்க நிதி திரட்டும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. |