க.பொ.த சா இலங்கை மகளிர் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர் 9ஏ சித்திகளை பெற்று சாதனை

26.11.2022 09:58:25

9A சித்தி

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.

இலங்கை மகளிர் தேசிய துடுப்பாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விஷ்மி குணரத்ன (வயது 17) இந்த வருட க.பொ.த பொதுப்பரீட்சையில் 9A சித்திகளுடன் சித்தியடைந்துள்ளார்.

கம்பஹா ரத்னாவலி பெண்கள் கல்லூரி மாணவியான இவர், இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவராகவும் உள்ளார்.