தவெக கட்சியுடன் கூட்டணி வைக்கும் முதல் கட்சி
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்த கட்சியுடன் சில பெரிய கட்சிகள் கூட்டணி வைக்கலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள எந்தெந்த கட்சிகள் விஜய்யின் கட்சியுடன் கூட்டணி சேரும் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், புதுவையில் ஆளும் கட்சியான ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய் மற்றும் ரங்கசாமி ஆகிய இருவரும் நட்புடன் உள்ளனர் என்பதும், கட்சி ஆரம்பிக்க முன்பும் மாநாட்டிற்கு முன்பும் சில ஆலோசனைகளை ரங்கசாமி விஜய்க்கு கூறியதாகவும் கூறப்படுக
எனவே, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் புதுவை தேர்தலில் பாஜக கூட்டணியிலிருந்து என்.ஆர். காங்கிரஸ் விலகி விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே, விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கும் முதல் கட்சியாக என்.ஆர். காங்கிரஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது