ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்ட கொரோனா சடலங்களின் எண்ணிக்கை

20.01.2022 06:42:50

கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு இதுவரையில் அடக்கம் செய்யப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 3,353 ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில் நேற்று (19) மேலும் ஒன்பது பேரின் சடலங்கள் அங்கு அடக்கம் செய்யப்ட்டுள்ளன.

முஸ்லிம்கள் – 04
பௌத்தர்கள் – 05

இவ்வாறு ஒன்பது சடலங்கள் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து அங்கு இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ள கொரோனா சடலங்களின் எண்ணிக்கை 3,353 ஆக அதிகரித்துள்ளது.