வடகொரியாவின் தூதர் தப்பி வந்துள்ளதாக தென்கொரியா தகவல்
28.01.2021 11:18:24
வடகொரியாவின் தூதராக பணியாற்றி வந்தவர் தென் கொரியாவுக்கு தப்பி வந்ததாக தென் கொரியாவின் தேசிய சட்டமன்ற புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
குவைத் நாட்டுக்கான வடகொரியாவின் தூதராக பணியாற்றி வந்த ரியூ ஹியூன் வூ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தென் கொரியாவுக்கு தப்பி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எனினும் அவர் எவ்வாறு தென் கொரியாவுக்குள் நுழைந்தார் என்பது பற்றி விளக்கம் அளிக்கப்படவில்லை.
வடகொரியாவை சேர்ந்த அரசாங்க எதிர்ப்பாளர்கள் பலர் அண்டை நாடான தென் கொரியாவுக்கு தப்பி சென்று அங்கு அடைக்கலம் புகுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.