அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் இவர்தானா?

22.03.2024 09:00:00

ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸை பெரும்பாலான மக்கள் ஏற்கொண்டு கொண்டாடினர். இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என பிரபலமான நடிகர்கள் நடித்தனர். தற்போது 25 வது ஜேம்ஸ் பாண்ட் படம் நோ டைம் டு டை டேனியல் கிரைக் நடிப்பில் உருவாகியுள்ளது.
 

 

இந்த படத்தோடு தான் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்க போவதில்லை என அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் புதிய ஜேம்ஸ் பாண்டாக அடுத்து நடிக்கப் போவது மேட் மேக்ஸ் புகழ் டாம் ஹார்டி என சொல்லப்பட்டது. அவரைத் தவிர ரிச்சர்ட் மேடன் , மைக்கேல் ஃபாஸ்பெண்டர் , டேனியல் கலுயா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்தது.
 

ஆனால் இப்போது அவெஞ்சர்ஸ் பட நாயகன் ஆரோன் டெய்லர் ஜான்சன்தான் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நாயகன் என சொல்லப்படுகிறது. விரைவில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.