சீரற்ற வானிலையால் 27 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு தெலுங்கானவில் 15 பேரும் ஆந்திராவில் 12 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படட்டுள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானாவின் அடிலாபாத் நிஜாமா பார்த் ரஜன்னா சிரிசில்லா புவன்கிரி விகாரபாத் சங்கரெட்டி முகிய பகுதிகளில் அதிகமழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும் ஹைதராபாத்தில் வெள்ளம் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்குமாறு ஆந்திர பிரதேச முதல்வர் என் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்