உலகளவில் இரண்டாம் இடம்

05.07.2022 09:13:09

மணிகண்டன் இயக்கத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகிபாபு நடிப்பில் வெளியான படம் ‘கடைசி விவசாயி’. இப்படம் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியான படம் 'கடைசி விவசாயி'. விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக உருவாகி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.
 

இந்நிலையில் இப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி உலக திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் இணையதளமான லெட்டர்பாக்ஸ்ட் வெளியிட்ட, 2022-ஆம் ஆண்டின் முதல் பகுதியில் வெளியான சிறந்த படங்கள் பட்டியலில், விஜய் சேதுபதி நடித்த "கடைசி விவசாயி" படம் 2-ஆம் இடம் பெற்றுள்ளது.