தென் சீனாவின் குவாங்சூ நகரில் சூறாவளி
தென் சீனாவில் உள்ள மிகப்பெரிய துறைமுக நகரமான குவாங்சோவில் சனிக்கிழமை (27) பிற்பகல் பாரிய சூறாவளி தாக்கியுள்ளது.
இதன்காரணமாக குவாங்டாங் மாகாணத் தலைநகரில் கடுமையாக மழை பெய்துவரும் நிலையில் ஆலங்கட்டி மழையினால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதோடு, 33 பேர் காயமடைந்தனர்.
மொத்தம் 141 தொழிற்சாலை கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூறாவளி மணிக்கு 2.8 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியுள்ளதோடு, பிற்பகல் 3 மணியளவில் அதிகபட்சமாக வினாடிக்கு 20.6 மீற்றர் வேகத்தில் வீசியதாக குவாங்சோவின் பையுன் மாவட்டத்தில் உள்ள லியாங்டியன் கிராமத்தில் உள்ள வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
குவாங்டாங் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி பல நகரங்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததோடு, பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். குறைந்தது 10 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை மற்றும் சூறாவளி குறித்து எச்சரிக்கைகளை வெளியிட்டப்பட்டிருந்தது.
செங்செங் மற்றும் பன்யுவின் குவாங்சோ மாவட்டங்களின் பெரியளவிலான ஆலங்கட்டி மழை பெய்து வானகங்களை சேதப்படுத்தியுள்ளது.
பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான குவாங்சோவின் விமான நிலையத்தில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
கனமழை, ஆலங்கட்டி மழை மற்றும் சூறாவளியுடன் அடுத்த ஐந்து நாட்களுக்கு மாகாணத்தில் அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.