வைகோவின் சமத்துவ நடைபயணம்!

02.01.2026 13:39:57

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் திருச்சியியில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று முதல் வரும் 12 ஆம் தேதி வரை சமத்துவ நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நடைபயணத்தின் தொடக்க விழா திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு விமானம் மூலம் திருச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தரவுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து காா் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் திருச்சி தென்னூா் அண்ணா நகா் உழவா் சந்தை திடலுக்கு செல்கிறாா்.

முதல்வர் ஸ்டாலின் நடைபயணத்தை தொடங்கிவைத்து வைகோவுடன் சிறிது தூரம் நடக்கவுள்ளாதகக் கூறப்படுகிறது. பின்னர், முதல்வர் விமானம் மூலம் சென்னைக்கு புறப்படவுள்ளார். டிரோன்கள் பறக்கத் தடை முதல்வா் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.