மோகன் ராஜா படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் நயன்தாரா?

05.01.2021 10:19:19

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'லூசிபர்'. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. 

இதன் ரீமேக் உரிமையை ராம் சரண் கைப்பற்றியுள்ளார். இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளார். இதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கதைப்படி அது ஒரு பெண் அரசியல்வாதி கதாபாத்திரம். இந்தக் கூட்டணி உறுதியானால், சிரஞ்சீவியும் நயன்தாராவும் இணையும் இரண்டாவது படமாக இது அமையும். 

 

அவர்கள் இருவரும் ஏற்கனவே சைரா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதேபோல் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகை நயன்தாரா ஏற்கனவே தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.