கோப் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது

07.10.2021 06:19:18

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.

இதன்படி, இன்றைய தினம்குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஸ்ரீ லங்கன் விமான சேவை கோப் குழுவில் கடந்த ஜூலை மாதம் 7 ஆம் திகதி முன்னிலையாகியிருந்தது.

அதன்போது, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாகக் கலந்துரையாடுவதற்காகவே இவ்வாறு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.