இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சங் சத்தியப்பிரமாணம்

13.02.2022 11:08:25

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சங் (Julie Chung) சந்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அவர், அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் வெண்டி ஆர். செர்மன் (Wendy R. Sherman) முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

ஜுலி சங், மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான அமெரிக்க  இராஜாங்க திணைக்களத்தின் பதில் உதவி செயலாளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.