கமலா ஹாரிஸ் தான் அடுத்த அதிபர்

06.09.2024 08:08:43

இதுவரை நடந்த 10 தேர்தல்களில் ஒன்பது தேர்தல் முடிவுகளை சரியாக கணித்த அமெரிக்கர் ஒருவர் வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் அவர்கள்தான் வெல்வார் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதுகின்றனர். சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் தான் வெல்வார் என்று கூறப்பட்டாலும் இருவருக்கும் இடையிலான வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த தேர்தல் கணிப்பாளர் ஆலின் என்பவர் இதுவரை 10 தேர்தல் முடிவுகளை கணித்து அதில் ஒன்பது தேர்தல் முடிவுகளை சரியாக கூறியுள்ளார். குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜோ பைடன் வெற்றி பெறுவார் என்று கூறியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ்,  குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை தோற்கடிப்பார் என்று ஆலன் கணித்துள்ளார். இவரது கணிப்பு சரியாக இருக்கும் என்று அமெரிக்காவில் நம்பப்பட்டு வருகிறது. இருப்பினும் நவம்பர் ஐந்தாம் தேதி அமெரிக்க மக்கள் தங்கள் அடுத்த அதிபரை யாரை தேர்வு செய்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.