மீண்டும் நடிக்கிறார் விஷ்மியா

11.08.2021 14:47:44

 

2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த உறியடி 2ம் பாகத்தில் அறிமுகமானவர் விஷ்மயா. அந்த படத்திற்கு பிறகு வேறு படங்களில் நடிக்கவில்லை. மாடலிங் துறையில் பிசியாக இயங்கி வந்தார். இந்த நிலையில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் வெற்றி ஜோடியாக நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் ஆவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்து வந்தது. 2வது கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் 15ம் தேதி முதல் தொடங்குகிறது.

எட்டு தோட்டாக்கள் படத்தில் அறிமுகமான வெற்றி இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார். வித்யா பிரதீப், வனிதா விஜயகுமார், ஜீவா ரவி, தங்கதுரை, ஜார்ஜ், பேபிஜாய், பாலா உள்பட பலர் நடிக்கின்றனர். மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகரான நந்து தமிழில் அறிமுகமாகிறார். எம்.ஷாம் இயக்குகிறார். கணேஷ் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.