நாடுகளுக்கிடையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பாரியளவில் இடைவெளி காணப்படுவதாக மீண்டும் தெரிவிப்பு!

19.05.2021 12:03:55

 

சில நாடுகளுக்கிடையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பாரியளவில் இடைவெளி காணப்படுவதாக மீண்டும் தெரிவிக்கப்படுகின்றது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோல் அதானோம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக செல்வந்த நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடையிலேயே இவ்வாறு பாரியளவில் இடைவெளி காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரிஸ் அமைதி மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.