யாழில் மேலும் ஐவர் கொரோனோவால் மரணம்!

26.08.2021 05:47:57

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று  உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த 5 பேருக்கே கொரோனாத் தொற்றுள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மருதடி வீதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும், சங்கானையைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும், சுன்னாகத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும், கொக்குவிலைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218 ஆக உயர்வடைந்துள்ளது.