“இ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” .

15.04.2026 14:38:16

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து தொடர்பாகத் தவறான தகவல்களைக் குறிப்பிட்டதாகப் புகார் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து இந்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யலாம் எனச் சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம் இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் இந்த மனுவிற்குத் தமிழ்நாடு அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அதில், “2021ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில் எடப்பாடி பழனிசாமி தவறான தகவல்களைத் தந்துள்ளார். எனவே எடப்பாடி பழனிசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.