ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை
15.11.2024 08:19:47
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள DEAN SHOES நிறுவனத்தின் காலணி தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்றார்.
இந்த தொழிற்சாலையின்மூலம் சுமார் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
என்று கூறப்படுகிறது.
ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் சிப்காட் தொழிற்பேட்டையில் அமையவுள்ள இந்த காலனி தொழிற்சாலை 130 ஏக்கரில் உருவாக்கப்பட இருக்க
இதனையடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சிவசங்கர், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.