மின்சார சபையின் ஊடக பேச்சாளர் ராஜினாமா!

22.02.2024 07:46:24

இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் நொயல் பிரியந்த அந்த பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் அண்மையில் வௌியிட்ட கருத்து தொடர்பில் சமூகத்தில் பெரும் சர்ச்சையாக மாறியதால் அது தொடர்பில் அவர் தமது வருத்தத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வௌியிட்டுள்ளார்.

மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகரவும், நொயல் பிரியந்த பதவியில் இருந்து விலகியுள்ளதாக தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் இல்லையேல் குப்பி விளக்கு வெளிச்சத்தில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.