44,430 வாகனங்கள் சந்தைக்கு விடுவிப்பு!

07.06.2024 09:47:23

இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

 

அவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்களும் 6,286 கார்களும் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதியமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், உதிரிபாகங்களை இணைத்து விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்களும் 6,286 கார்களும் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆழமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன், இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் அதேவேளையில், உள்ளூர் வாகனங்களை கூட்டுச்செய்யும் வணிகங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் என வாகன உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இறக்குமதிக்கு தடை விதிப்பது உள்ளூர் வாகன உற்பத்தியை ஊக்கமளிப்பதாக அமைந்தாலும் ஒரு நாட்டின் வாகன உற்பத்தியை தொடங்குவது நீண்டகால செயல்முறை எனவும் வாகன உற்பத்தியாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.