இலகுரக ஹெலிகொப்டர் உள்ளிட்ட ஆயுதங்களை முப்படைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார்.

20.11.2021 10:20:36

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகொப்டர் உள்ளிட்ட ஆயுதங்களை முப்படைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் நடந்த விழாவில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வடிவமைத்து உருவாக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகொப்டரை விமானப்படைத் தளபதி விஆர் சவுதாரியிடமும், இந்திய ஸ்டார்ட்-அப்களால் கட்டப்பட்ட ட்ரோன்கள் மற்றும் யுஏவிகளை இராணுவத் தளபதி நரவனேயிடமும் வழங்கினார்.

மேலும் DRDO மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கடற்படைக் கப்பல்களுக்கான மேம்பட்ட மின்னணு போர்த் தொகுப்பினை கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங்கிடமும் பிரதமர் மோடி வழங்கி வைத்தார்.