2 நாட்களில் காந்தா படம் செய்துள்ள வசூல்!
16.11.2025 13:09:32
|
ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும் போதும் அப்படத்தின் வசூல் குறித்து ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த 14ஆம் தேதி திரைக்கு வந்த காந்தா படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. காந்தா திரைப்படத்தை இயக்குநர் செல்வராஜ் செல்வமணி இயக்க துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவின் 1950 காலகட்டத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருந்தனர். |
|
இந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் காந்தா படம் 2 நாட்களை கடந்துள்ளது. இந்த 2 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 20+ கோடி வசூல் செய்துள்ளது. |