தடை விதிக்க முன்மொழியும் அவுஸ்திரேலியா!
அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடக பயன்பாட்டை தடை செய்ய அரசாங்கம் சட்டம் இயற்றும் என பிரதமர் ஆன்றணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் நமது பிள்ளைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன, தடை செய்ய உரிய நேரம் இதுவென பிரதமர் ஆன்றணி அல்பானீஸ் குறிப்பிட்டுள்ளார். அவை உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட 12 மாதங்களுக்குப் பிறகு சட்டம் நடைமுறைக்கு வரும். |
இந்த ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், பெற்றோரின் ஒப்புதலைப் பெற்ற பயனர்களுக்கும் இதில் விதிவிலக்குகள் இருக்காது என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டோக், கூகிள், யூடியூப் உள்ளிட்ட தளங்கள் சட்டவரம்புக்குள் கொண்டுவரப்படும். அவுஸ்திரேலியாவின் கொள்கை மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தாலும், பல நாடுகள் ஏற்கனவே சட்டத்தின் மூலம் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளன. கடந்த ஆண்டு பிரான்ஸ் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்க பயன்பாட்டிற்கு தடை விதிக்க முன்மொழிந்தது, இருப்பினும் பயனர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. |