காணி அபகரிப்புக்கு எதிராக பண்ணையாளர்கள் மேற்கொண்ட போராட்டம்

09.11.2021 11:43:51

சிவனேசத்துரை சந்திரகாந்தன் (Pillayan)  பின்னர்  மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை காணிகள்மீண்டும் அபகரிக்கப்படுவதாக பண்ணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு (2020) மட்டக்களப்பு வெளிமாவட்டங்களை சேர்ந்த சிங்கள மக்கள் பாரிய காணி அபகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை குறித்த காணி அபகரிப்புக்கு எதிராக பண்ணையாளர்கள் மேற்கொண்ட போராட்டம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனால் (Shanakiya Rasamanickam) தொடரப்பட்ட வழக்கு, மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் தொடர்ச்சியான எதிர்ப்பு போராட்டங்கள் தமிழ் மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்ததினால் இந்தக் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

கடந்த வாரம் (2020)  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான பிள்ளையான் (Pillayan) பண்ணையாளர்களுடன் கலந்துரையாடுவதற்காக மயிலத்தமடு மாதவனை பகுதிக்குச் சென்று பண்ணையாளர்களின் பிரச்சினையை கேட்டு அறிந்து கொண்டதுடன், இந்த மேய்ச்சல் தரை காணிகள் தொடர்பாக பல வாக்குறுதிகளையும் அளித்திருந்தார்.