'தரக்குறைவான விமர்சனம் கூடாது'
தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பது குறித்துப் பேசி இருந்தார். |
இந்நிலையில் இன்று சென்னை அடுத்த பனையூரில் தனது கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தமாக 138 நிர்வாகிகள் பங்கேற்றனர். நடந்து முடிந்த தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டை மிகப்பெரிய அளவில் வெற்றி மாநாடாக நடத்தி காட்டிய நிர்வாகிகளுக்கும் அதற்காக அமைக்கப்பட்ட குழுவினர்களுக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்ததோடு மேலும் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை கண்ணியத்தோடு கையாண்டு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். தரைக்குறைவாக விமர்சிக்கக் கூடாது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தரக்குறைவான விமர்சனங்களை வைக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாக்குச்சாவடிக்கு 10 பேர் வீதம் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்; புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்' என பல அறிவுறுத்தல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. |