சென்னை அண்ணா அறிவாலயத்தில் பீர்பாட்டில் வீச்சு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பீர் பாட்டில் வீசப்பட்டதை அடுத்து போலீசார் இது குறித்து தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது என்பதும் இங்கு எப்போதும் கட்சிக்காரர்கள் கூட்டம் பரபரப்பாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தின் வளாகத்தில் திடீரென இரண்டு பேர் பீர் பாட்டில்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அண்ணா அறிவாலயத்திற்குள் இரண்டு பேர் பாட்டில்களை வீசிவிட்டு தப்ப முயன்றதாகவும் அப்போது அங்கு இருந்த போலீசார் அவர்களை விரட்டி பிடித்ததாகவும் தெரிகிறது.
பீர் பாட்டில் வீசியவர்களில் ஒருவர் கோவர்தன் என்றும் இவர் கண்ணகி நகரை சேர்ந்தவர் என்பதும் முதல் கட்ட போலீசார் விசாரணை தெரிய வந்துள்ளது. அவரிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நீர் பாட்டில்களை வீசியது ஏன் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
திமுகவின் தலைமை அலுவலகத்தில் பீர் பாட்டில் வீசப்பட்டிருப்பது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.