அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு தாக்குதல்.

28.08.2025 08:52:28

அமெரிக்காவில் பயங்கரமான துப்பாக்கி சூடு சம்பவத்தை ஏற்படுத்திய நபரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதன்படி, அமெரிக்காவின் மினியாபிலிஸில்(Minneapolis) உள்ள அன்னவுன்சியேஷன் கத்தோலிக்க பள்ளியில் (Annunciation Catholic School) தாக்குதல் நடத்திய நபரின் பெயர் ராபின் வெஸ்ட்மேன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காவல்துறை வழங்கிய தகவலில், சந்தேக நபர் 20 களின் முற்பகுதியில் உள்ளவர் என்றும், அவர் மீது குறைவான குற்றப் பின்னணி மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

8 மற்றும் 10 வயதுடைய இரண்டு குழந்தைகளின் உயிர் கொல்லப்பட்டுள்ள நிலையில், தாக்குதல்தாரி ராபின் வெஸ்ட்மேன் இறுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.