பாராளுமன்றத்தில் சிறப்பாக இடம்பெற்ற நவராத்திரி விழா!
இலங்கைப் பாராளுமன்றத்தில் 2026ஆம் ஆண்டுக்கான நவராத்திரி விழா இன்று (20) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில், பாராளுமன்ற உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பங்களிப்புடன் இவ்விழா முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையின் மத நல்லிணக்கத்தையும் இந்து சமயப் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில், விசேட சமய வழிபாடுகளும் நவராத்திரி பூஜைகளும் இடம்பெற்றன.
இந்த வழிபாடுகளை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவாகம கலாநிதி சிவஸ்ரீ வைத்தீஸ்வரக் குருக்கள், சனாதன தர்மபீடத்தின் தலைவர் சிவஸ்ரீ ஜகதீஸ்வரக் குருக்கள் மற்றும் மயூராபதி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு உதயராகவக் குருக்கள் ஆகியோர் இணைந்து சிறப்பாக முன்னெடுத்தனர்.