மூவரணி போடும் பிளான்!.
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்ற ஆட்சி அமைத்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மூன்றாம் இடத்தை பெற்றது. 2021 சட்டமன்ற தேர்தல், 2024 பாராளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் என அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்ததால் எடப்பாடி பழனிச்சாமி தலைமை மீது அதிருப்தி கொண்ட சிவி சண்முகம், எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட 25 எம்.எல்.ஏக்கள் தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கினர். செய்தியாளர்களை சந்தித்து திமுகவின் ஆதரவுடன் பழனிச்சாமி ஆட்சியமைக்க முயன்றார் என சிவி சண்முகம் பரபரப்பு குற்றம் சாட்டினார்.
அதோடு அந்த 25 எம்.எல்.ஏக்களும் சட்டசபையில் முதல்வர் ஜோசப் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதோடு அவர்களில் 7 பேர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவிலும் இணைந்து விட்டனர். அதில் இரண்டு தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளில் சமீபத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று அதில் தவெக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
இடைத்தேர்தலிலும் அதிமுக மூன்றாம் இடத்தை பெற்றது. இதையடுத்து எஸ்.பி வேலுமணி, சிவி சண்முக,ம் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கடந்த சில நாட்களாகவே ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதில், தவெகவுகு ஆதரவு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம். சட்டப்படி தவெகவுக்கு ஆதரவளிக்க மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏக்கள் வேண்டும். அதிமுகவுக்கு தற்போது 41 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் 28 பேருடைய ஆதரவு பெறுவதற்கான முயற்சி நடப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு அதிமுக தலைமையையும் மாற்றும் முயற்சியிலும் அவர்கள் இறங்கியிருக்கிறார்களாம்.