துப்பாக்கிகளுடன் மூவர் கைது

18.10.2021 14:06:00

புத்தளம், தப்போவ சரணாலயத்துக்கு அருகிலுள்ள பாவட்டாமடுவ பிரதேசத்துக்கு வேட்டையாடச் சென்ற மூவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு கருவலகஸ்வௌ வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தப்போவ, பாவட்டாமடுவ பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.