வசூலில் சாதனை படைத்த சூரியின் ‘கருடன்’!
கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.
இதற்கிடையில் சூரி ஹீரோவாக நடித்துள்ள கருடன் என்ற திரைப்படம் மே 31 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆனது முதல் படம் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. இதனால் படத்தின் வசூலும் அதிகமாகி வருகிறது. இந்த படத்தில் சூரியோடு சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தது படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
இந்த படம் ரிலீஸானதில் இருந்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நிலையில் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்நிலையில் இந்த படம் வெளியாகின் ஐந்து நாட்களில் இந்தியாவில் மட்டும் 20 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து சாதனை படைத்துள்ளது.