பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்ற வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிநதுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் திரைத்துரை மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலங்களாக உள்ளவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இன்று முதல் தொடங்குகிறது. இந்நிகழச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது பிக்பாஸ் சீசன் 6. தங்களுக்குள் அறிமுகம் இல்லாத போட்டியாளர்கள் எவ்வித வெளியுலக தொடர்பும் இல்லாமல் ஒரு வீட்டில் 100 நாட்கள் தங்கும்போது அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களே பிக்பாஸ் நிகழ்ச்சி. இடையில் பிக்பாஸ் சொல்லும் அனைத்து டாஸ்க்குகளை முடிக்க வேண்டும்.
மேலும் இதில் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை பொருத்து வாரா வாரம் ஒருவர் வீ்ட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். விஜய் டிவியில் இரவு நேரங்களில் பிக்பாஸ் வீ்ட்டில் நடந்த ஹைலைட்ஸ் ஒளிபரப்பாகும். ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் பார்த்து ரசிக்கலாம் என்று பிக்பாஸ் ப்ரமோவில் கூறப்பட்டுள்ளது