தேர்தல் அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்

29.01.2023 13:11:00

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி கடந்த 21 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், தேர்தல் திணைக்கள அதிகாரிகள் இருவருக்கு ஏற்கனவே கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மற்றுமொரு அதிகாரிக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கை அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதிபருக்கு கடிதம்

சுதந்திரமான, நீதியான தேர்தலை நடத்துவதற்குரிய நிலையை ஏற்படுத்தித் தருமாறுகோரி தாம் குறித்த கடிதத்தை அதிபருக்கு அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் அரச நிறுவனங்களின் நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனத்தை செலுத்துமாறு நிமல் புஞ்சிஹேவா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பிரத்தியேக ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.