திருகோணமலையில் பயிற்சி விமானம் விபத்து

07.08.2023 10:03:32

விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று திருகோணமலை சீனன்குடா விமானப்படை முகாம் பகுதியில் விபத்துக்குள்ளானது.

விமானப்படையின் சீனன்குடா  கல்லூரியில் அமைந்துள்ள இலக்கம் 01 பறக்கும் பயிற்சி பிரிவின் விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட PT 6 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

இன்று (07) முற்பகல் 11.27 மணியளவில் சீனன்குடா விமானப்படை முகாம் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதுடன், அதில் பயணித்த இரண்டு அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.