அரண்மனை படத்தின் 3ம் பாகம் தயார்

15.09.2021 15:58:06

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் 3ம் பாகம் தயாராகி உள்ளது. இதனை அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரித்துள்ளார். சி.சத்யா இசை அமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி, விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா, மனோபாலா, சம்பத், சாக்ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் நடித்துள்ளனர். படம் தணிக்கை ஆகியுள்ளது.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். அரண்மனை காமெடி படமாக இருந்தாலும் பயமுறுத்தும் பேய் சமாச்சாரங்களும் இருப்பதால் படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.