1000க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த நிலச்சரிவு!

02.09.2025 07:45:20

மேற்கு சூடானில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம்  மர்ரா மலை பகுதியில்  இடம்பெற்ற நிலச்சரிவில் ஒரு கிராமமே தரைமட்டமாக்கப்பட்டுள்ளதுடன் 1000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நிலச்சரிவில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு, இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையிலேயே இந்த நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த நிலச்சரிவில்  உயிரிழந்தவர்களின் உடல்களை   மீட்க உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களுக்கு சூடான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.