பராட்டே சட்டம் காரணமாக 127 போ் உயிா்மாய்ப்பு

04.11.2024 08:15:38

நாட்டில் உள்ள வங்கிகளினால் அமுல்படுத்தப்பட்ட “பராட்டே சட்டம்” காரணமாக கடந்த வருட   த்தில் 127 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள்  உயிா்மாய்த்துள்ளதாக  மாவட்ட ஒன்றிணைந்த தொழில் முயற்சியாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சட்டத்தினால் இலங்கையிலுள்ள  சுமாா்  நான்கு இலட்சம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள்  பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

வியாபார தளங்கள் முதல் வசிப்பிடங்களை கூட இழந்த பலர் ஏற்கனவே மிகவும் அசௌகரியமான நிலையில் இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் சம்லி குமாரசிங்க  குறிப்பிட்டுள்ளாா்.  கடந்த அரசாங்கத்தை பற்றி பேசினால், நிவாரணம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் எனக் குறிப்பிட்ட அவா்  பராட்டே சட்டத்தின் கீழ் சொத்துக்களை ஏலம் எடுத்த  சுமாா்  127 பேர் கடந்த ஆண்டு தொடக்கத்தில் உயிா்மாய்த்துள்ளதாகவும்  பராட்டே சட்டத்தின் கீழ் சொத்துக்கள் ஏலம் விடப்பட்ட  ஒருவருக்கும் வங்கிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கவில்லை எனவும் அவா் குறிப்பிட்டாா்.

தங்களுக்கு வழங்கப்பட்டது நிவாரண காலம் மாத்திரம் தான். அதுவும் உண்மையில் ஒரு வட்டி பொறி எனத் தொிவித்த அவா்   தற்போதைய அரசாங்கத்துடன் சில கலந்துரையாடல்களை நடத்தியதாகவும்  இதனால் பராட்டே சட்டம் டிசம்பர் 15 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும்  அதன் பின்னா்  அமுலுக்கு வருபோது  உயிா்மாய்ப்புகள்  இருநூறு முந்நூறாக அதிகரிக்கும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பராட்டே சட்டம் இடைநிறுத்தப்பட்ட உடனே தொழில்முனைவோருக்கு முன்னேற எந்த வழியும் இல்லை எனவும்  தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் நாட்டில் வணிகத்தை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும்  சம்லி குமாரசிங்க  குறிப்பிட்டுள்ளாா்