
வெற்றி இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்த அல்லு அர்ஜுன்!
15.06.2025 06:06:00
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் புஷ்பா. இரண்டு பாகங்களாக படம் வெளியாக செம வசூல் வேட்டை நடத்தியது. தற்போது அல்லு அர்ஜுன், அட்லீ இயக்கத்தில் ஒரு பிரம்மாண்ட படம் நடிக்க உள்ளார். |
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் சைன்ஸ் ஃபிக்ஷன் கதைக்களத்தை மையமாக கொண்டு படம் உருவாக உள்ளது. சமீபத்தில் இந்த பிரம்மாண்ட படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க கமிட்டாகியுள்ளார். தற்போது அல்லு அர்ஜுன் அடுத்தடுத்து நடிக்கப்போகும் படங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அட்லீ படத்தை முடித்த கையோடு பசில் ஜோசப், பிரசாந்த் நீல் ஆகியோருடன் அடுத்தடுத்து படங்கள் நடிக்க உள்ளாராம். |