கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு!
கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக, அவ்வீதி ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, கனேதென்ன பிரதேசத்தில் மலையிலிருந்து பாறைகள் வீழ்ந்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் கடையில் இருந்த பலர் இடிபாடிகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களை மீட்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் விற்பனை நிலையத்தில் இருந்த சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், வீதியின் வாகன போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது நிலவும் ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு, இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இயன்றவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.