சிறுவர் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

20.01.2022 05:50:22


கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதே நிலைமை ஏனைய வைத்தியசாலைகளிலும் காணப்படுகிறதா என்பது தொடர்பில் ஆராயப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

அத்துடன் பாடசாலைகள் அனைத்தும் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் , மாணவர்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே மாணவர்கள் மத்தியிலும் , மாணவர்கள் ஊடாகவும் கொவிட் பரவல் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் கனிசமானளவு அதிகரிக்கக் கூடும்.

எனவே தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.